கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதாயின் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தை விரைவாக திருத்தம் செய்யவேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கும், புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கும் ஏற்பாக விடயதானங்களை இயற்றுவதற்கும், அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கும் வகையிலான சட்டவரைவு மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சரின் பணிப்புக்கு அமைய விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் தொடர்பான சட்டவரைவை இவ்வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார்.