ஐயப்பன் பக்தன் உடையில் கோண்டாவிலில் துணிகர திருட்டு! (CCTV காட்சி வெளியாகியது)

ஐயப்பன் பக்தன் உடையில் கோண்டாவிலில் துணிகர திருட்டு! (CCTV காட்சி வெளியாகியது)

editor 2

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கோண்டாவில் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றை உடைத்த நபர் ஒருவரால், 10 இலட்சம் ரூபா பெறுமதியான பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பம் 31-12-2024 அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஐயப்பன் பக்தர்கள் அணியும் உடைகளுடன் அலவாங்கு ஒன்றுடன் வந்த நபர் ஒருவரே குறித்த திருட்டினை மேற்கொண்டிருப்பது குறித்த நிலையத்திற்கு எதிரில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது,

மொத்தமாகவும் சில்லறையாகவும் அழககத்துக்குள் வைக்கப்பட்டிருந்த 6 இலட்சம் ரூபா பணமும் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான 3 நகைகளும் திருடப்பட்டுள்ளன.

அதேவேளை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான அழகு சாதனப் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அழகக உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

CCTV காட்சிகளின் அடிப்படையில் அதிகாலை 2 மணி தொடக்கம் 3 மணிவரையான ஒரு மணி நேரத்தக்கு மேலாக குறித்த நபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் ஐயப்பன் ஆலயம் காணப்படுவதுடன் திருட்டு நடைபெற்ற வேளையில் வீதியில் வாகனங்களும் பயணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

https://www.facebook.com/share/v/QA7ZCgCGgHcSZEHY
https://www.facebook.com/thamilnewslk/videos/1823409751763400
Share This Article