ஆளுங்கட்சி எம்பியை விமர்சித்த அரசியல் பிரமுகர் கைது!

ஆளுங்கட்சி எம்பியை விமர்சித்த அரசியல் பிரமுகர் கைது!

editor 2

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை சமூக ஊடகங்களில் அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், களுத்துறை – மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ரம்முனி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (03) காலை அகுருவாதோட்ட – படகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ரம்முனி , அண்மையில் தனது பேஸ்புக் கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை இழிவுபடுத்தும் வகையில் பதிவொன்றை இட்டிருந்தார். 

பின்னர் அந்த பதிவை அன்றே நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article