சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

editor 2

சுகாதாரத்துறைக்கு இம்முறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவு தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜய
திஸ்ஸ தெரிவித்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள இரத்த மற்றும் எலும்பு மாற்றுச் சிகிச்சைப் பிரிவு நேற்று சுகாதார அமைச்சர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

ருஹூணு மகாவிகாரையின் நிதி உதவியில் விமானப்படையினரின்
முழுமையான ஒத்துழைப்புடனேயே இந்த கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவினுள் ஒரே தடவையில் 4 பேர் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் போது உரையாற்றிய சுகதாதாரத்துறை அமைச்சர் ,

சுகாதாரத்துறை என்பது நிதி கோரப்படும் பட்சத்தில் உடனடியாக
எந்த அரசாங்கமும் நிதியை விடுவிக்கும் துறையாகும்.

இந்த துறைக்காக பெருமளவிலான நிதி ஒவ்வொரு வருடமும்
ஒதுக்கப்படுகின்றது.

அந்த வகையில் எந்த வருடமும் முன்னெப் போதும் இல்லாத வகையில் அதிகளவு நிதியை சுகாதார துறைக்கு ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் நோக்கங்களுக்காக சுகாதார துறைக்குள் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.

மாறாக எதிர்வரும் 20 வருடங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேசிய வேலைத்
திட்டத்திற்கு அமையவே அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – என்றார்.

Share This Article