திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நீர்கொழும்பு தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த கடற்கரையின் ஓரமாக கைப் பையும் ஆடைகளுடன்கூடிய பயணப்பையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அத்துடன் இவர் திருமணமாகாதவர் எனவும் தெரிய வருகின்றது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.