25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன
ரொட்றிக்கோ நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட்
ஜெனரல் விக்கும் லியனகேயின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய இராணுவத்தளபதியாகப் பதவியேற்றுள்ள மேஜர்
ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ, இலங்கை இராணுவத்தின் பிரதிப்பிரதானியாகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நேற்று நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.