ஓய்வு பெறுகிறார் சவேந்திரசில்வா?

editor 2

ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப்பிரதானி பதவியிலிருந்து 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை கடந்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்திருந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 2022 மே 31 வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக பணியாற்றினார்.

அதன் பின்னர், தனது பதவிக்காலம் நிறைவடைய, 2022 ஜூன் முதலாம் திகதி பாதுகாப்புப் படைகளின் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே அவரது பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

அதனையடுத்து, தற்போது புதிய அரசாங்கம் அமைந்திருக்கும் நிலையில் இவரது ஓய்வு தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.

Share This Article