அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்!

editor 2

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இன்று (28) இடம்பெற்றது.

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புலிகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

Share This Article