தேர்தலில் கூட்டணி அமைக்க சுதந்திரக்கட்சி முயற்சி!

editor 2

உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விரைவில் இக்கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Article