திருக்கோவில் கடற்பரப்பில் நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களும் மீட்பு!

Editor 1

அம்பாறை – திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமல் போன மூவரின் சடலங்களும் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன. 

நேற்று மாலை குறித்த மூவரும் கடலுக்கு நீராடச் சென்ற நிலையில் அலையில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்தனர். 

குறித்த மூவரும் காவல்துறையினர் மற்றும் கடற்படையினரால் தேடப்பட்டு வந்தநிலையில், இன்று மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அம்பாறை பொத்துவில் சங்கமன்கண்டி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மகன், 17 வயதுடைய மருமகன் மற்றும் 38 வயதுடைய தந்தை ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article