மஹிந்த தரப்பு மீது அரசியல் பழிவாங்கல் – சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

Editor 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இராணுவ பாதுகாப்பு அரசியல் பழிவாங்கலுக்காகவே நீக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர
காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

முன்னாள் ஜனாதிபதிபதிகளுக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டமை முறையற்றதொரு செயற்பாடாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பாதுகாப்பு ஏதுமின்றி மக்கள் மத்தியில் செல்வதற்கான சூழலை மகிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. இராணுவத்தினர் தமது சொந்த ஊர்களுக்கு சவப்பெட்டியில் செல்லும் யுகத்தை மகிந்த ராஜபக்ஷவே முடிவுக்கு கொண்டு வந்தார். ஆகவே அவருக்கு பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு பிரஜைகளினதும் தலையாய கடமையாகும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷவுக்கும் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலை யிலும் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும்.

இதனை அரசியல் பழிவாங்கலாகவே குறிப்பிட வேண்டும்.
தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.

அரச வரப்பிரசாதங்களை பயன்படுத்து வதில்லை என்று குறிப்பிட்ட ஆளும் தரப்பினர் அரச சிறப்புரிமைகளை முழுமையாக பயன்படுத்துகிறார்கள். நாட்டு
மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள் – என்றார்.

Share This Article