அண்மையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 06 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.