அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க தனியார்த்துறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளின்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி தனியார்த்துறையினர் அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.