அனைத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரச பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆகக் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.