அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
47 வயதுடைய ஒருவருக்கே விக்டோரியா நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தகராறொன்றின்போது, குறித்த நபர் தமது மனைவியைத் தாக்கிக் கொலை செய்துள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.