அனுர – மோடி ஒப்பந்தம்; ரணில் வரவேற்பு!

அனுர - மோடி ஒப்பந்தம்; ரணில் வரவேற்பு!

editor 2

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்,

இருநாட்டு அரச தலைவர்களும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார் 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார் 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. 

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. 

இதனை வரேவேற்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்

Share This Article