யாழ்.நீதிமன்றில் சரணடைந்த அர்சுனாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை!

யாழ்.நீதிமன்றில் சரணடைந்த அர்சுனாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை!

editor 2

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் ரீ. சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.

இதன்போது அவர் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

Share This Article