இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு கனடாவின் ஒட்டோவாவில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவல கத்தில் நடைபெறவுள்ளது
இதன்போது, பொறுப்புக் கூறல், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் திருகோணமலை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சண்முகம்குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.