தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவிற்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்றசெயல். தேர்தல் வெற்றிகளை வைத்து தீர்வு விடயத்தை பார்க்க முடியாது. சுமந்திரனுக்கும் இது தெரியும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஒற்றுமையான தீர்வுத் திட்டதத்தை முன்வைக்கின்றபோதே எமது மக்களும் அதை விரும்புவார்கள். அந்த பலத்தின்மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமது பக்கம் திருப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
வர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழர்களை பொறுத்த வரை பல பிரச்னைகள் தீர்க்கப் படாமல் இருக்கின்றன. எனவே இனப்பிரச்னை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடி
வுக்கு ஆதரவாக மற்றக் கட்சிகள் செல்வதென்பது சாத்தியமில்லை.
ஒன்றாக இணைந்து ஒரு மேசையில் இருந்து விவாதித்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போதே அது வலுவானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.
அதன் மூலமே புதிய அரசியல் சாசனத்தில் எவ்வாறான கோரிக்கையை முன்வைக்கலாம் என்ற கடமைப்பாட்டை நாம் செய்யமுடியும்.
தமிழரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டது என்பதற்காக அவர்கள் எடுக்கின்ற முடிவுக்கு ஏனையவர்கள் ஒத்துவரவேண்டும் என்று சொல்வது முறையற்ற செயல். தேர்தல் வெற்றிகளை வைத்து இதனை பார்க்க முடியாது.
ஒற்றுமையான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கின்ற போதே எமது மக்களும் அதை விரும்புவார்கள். அந்த பலத்தின் மூலமே அரசாங்கத்தின் பார்வையை எமது பக்கம் திருப்ப முடியும்.தனித்தனியாக செயற்பட்டால் அதை வைத்து
அரசியல் செய்யும் நிலையில் புதிய அரசு ஈடுபடும்.
பிரிந்து சென்றதால் நாம் பல பாடங்களை கற்றிருக்கிறோம். எனவே நாங்கள் செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியற்ற ஒன்றாகவே நான் பார்க்கிறேன். சுமந்திரனுக்கும் இது நன்றாக தெரியும். அவரும்
ஒத்துவருவார் என்று நினைக்கிறேன்.
தமிழரசுக்கட்சியும் ஒத்துவரும் என்று நினைக்கிறேன் – என்றார்.