அரசியை மறைத்து வைத்துள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்யும் வர்த்தர்களைத் தேடி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்றும் (14) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, முற்பகல் 9 மணிவரையில், 200க்கும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் கடந்த 4ஆம் திகதி அரசி இறக்குமதிக்காகத் தனியார் இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், இதுவரையில் 2,300 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.