அரிசிக்கான புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இதன்படி, அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த விற்பனை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக்குறைந்த சில்லறை விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
இதற்கமைய உள்நாட்டு நாடு அரிசி கிலோவொன்றுக்காக நிலவிய 220 ரூபாய் என்ற அதிகபட்ச சில்லறை விலை 230 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் சம்பா அரிசி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 240 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் கீரி சம்பா அரிசி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
இதனிடையே, உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச மொத்த விற்பனை விலை 215 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச மொத்த விற்பனை விலை 225 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச மொத்த விற்பனை விலை 235 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச மொத்த விற்பனை விலை 255 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.