மாணவர்களுக்கு தைத்த சீருடைகளை வழங்க நடவடிக்கை!

Editor 1

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதனால் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share This Article