அரசாங்க கணக்குகள் (கோபா குழு) பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு எனப்படும் கோப் குழுவின் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு வழங்கப்படவுள்ளதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.
அவ்வாறான விசாரணைகளுக்கு அந்த அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர் ஒருவரை கோப் குழுவின் தலைவராக நியமிப்பதனை நாங்கள் விரும்பவில்லை எனவும் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.