தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் புழக்கத்தில் உள்ளதால், நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அவசரகால கொள்வனவுகளில் 40 சதவீதமானவை இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகளை உள்ளடக்கியுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
பல மருத்துவமனை பணிப்பாளர்கள், மருந்து ஆய்வுக் கூட்டங்களில் சுகாதார தலைமை அதிகாரிகளுக்கு இந்த புள்ளிவி வரங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்க மருத்துவமனைகளில் திடீரென மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
ஏற்படும்போது பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அவசரமாக கொள்வனவு செய்யப்படுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கு காரணமாக மருந்துப் பொருட்களின் தரம் குறித்து மதிப்பீடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மருந்து வகைகள் கொள்வனவு செய்வது குறித்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.