5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் இன்று (05) முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.
மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரி நிலுவையைச் செலுத்தாது தொடர்ந்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏனைய அனைத்து மதுபான உற்பத்தி உரிமங்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குப் பின்னர் புதுப்பிக்கப்படாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.