தமிழ்நாடு – புதுச்சேரி இடையே ஊடறுக்கிறது பெங்கல் புயல்!

Editor 1

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்து காங்கேசன்துறைக்கு வடகிழக்காக 280 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்காக 360 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்றிரவு 11.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றைய தினம் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான பகுதியை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article