மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக
அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின்போது எடுக்கப்படும் தீர்மானங்களே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடர்பில் இறுதி இணக்கப் பாட்டுக்கு வருவதற்கு அடிப்படையாக அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.