வவுனியா – மகாகச்ச கொடி குளத்தில் தவறி வீழ்ந்த நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி வவுனியா- மகாகச்சக்கொடி குளத்திற்கு நீராடச் சென்ற நிலையில் இளைஞர் ஒருவர் தவறி அந்த குளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.
இந்தநிலையில், மூன்று நாட்களின் பின்னர் இன்று காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.