உயர்தரப்பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

உயர்தரப்பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

Editor 1

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை டிசெம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், உதவிகளைப் பெறுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113668020, 0113668100, 0113668013, 0113668010 மற்றும் 0763117117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Share This Article