ரவிகருணாநாயக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் அடிப்படையிலேயே தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின்படி ( 99 ஏ பிரிவு) தேசியப்பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களையும் தோல்வியடைந்தவர்களையும் நாடாளுமன்றத்தில் உள்வாங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் தேசியப்பட்டியல் நியமனம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதால் எவரும் எதுவும் செய்ய முடியாது,பொதுத்தேர்தலின் பின்னர் தேசியபட்டியல் நியமனங்களை மேற்கொள்ளும்போது தோல்வியடைந்த வேட்பாளர்களை நியமிக்கலாம்,என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு தேசிய பட்டியல் வேட்பாளர்களில் ஒருவர் ஓய்வுபெற்றால் ரணில்விக்கிரமசிங்கவை கூட நியமிக்கலாம்,