வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவத் தலைமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிலிருந்து 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறிமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தியிருந்ததுடன்நில அளவை செய்வதற்கும் பல தடவைகள முயற்சிக்கப்பட்டிருந்தது.