மக்கள் ஆணையாயை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் – எரிக்!

மக்கள் ஆணையாயை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - எரிக்!

Editor 1

பாராளுமன்றத் தேர்தலில், இலங்கை அரசாங்கத்திற்கு
கிடைத்துள்ள வெற்றி, ஆழமான சீர்திருத்தங்களுக்கான ஆணையை வழங்குவதாகவும், அதனை, அரசாங்கம் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர்
எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன்,
ஒரு சிறந்த ஒப்பந்தத்திற்காக பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை, அதன்
பிடியில் இருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம் முன்வைக்கப்படவேண்டும்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லிம்களுக்கான
உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

ஊழலுக்கு எதிராக கடுமையான போராட்டம்.

சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என எரிக் சொல்ஹெய்ம் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article