2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.
இதற்கமைய தற்போது வரை நாடளாவிய ரீதியில் 30% வாக்குப் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தம் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 5,006 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இன்று காலை 12 மணிவரையில்,
கண்டி – 30%
பதுளை – 41%
திகாமடுல்ல – 35%
கேகாலை – 32%
மட்டக்களப்பு – 30%
பொலன்னறுவை – 42%
புத்தளம் – 30%
திருகோணமலை – 43%
குருநாகல் – 28% மற்றும்
மாத்தளை – 40 % ஆக
பதிவு செய்யப்பட்டுள்ளது.