போலி நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்.இளைஞர் கொழும்பில் கைது!

போலி நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்.இளைஞர் கொழும்பில் கைது!

Editor 1

போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸூக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயது நபராவார்.

கைதான இளைஞன் நேற்று முன்தினம் இரவு 08.35 மணியளவில் சென்னையை நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
சந்தேக நபர் கொண்டு வந்த பயண பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் நுழைவுச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரான இளைஞன் இந்த போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸூக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற
புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share This Article