பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட சகல ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இலங்கை கடற்படையின் வெலிசறையில் அமைந்துள்ள அரச வணிக வெடிபொருள் களஞ்சியசாலையில் கையளிக்குமாறு அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.