பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரை குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து நேற்று புதன்கிழமை விடுதலை செய்தார் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்.
கிளைமோர் குண்டுகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு வவுனியா – சாளம்பைகுளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையானவர்களில் இருவர் வவுனியா பெரிய புளியங்குளத்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு கைதான மூவருக்கும் எதிராக பொலிஸ் விசாரணையின்
அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் நடந்து வந்த நிலையில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த எதிரிகளுக்கு எதிராக நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுத சட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச தரப்பு வழக்கு தொடுநரால் சந்தேகத்துக்கு அப்பால்
இறை ஒப்புச்சாட்சியங்ளை சமர்ப்பிக்கத் தவறியமையால் சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக
நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் வழக்குத் தொடுநரால் (சட்டமா அதிபர் திணைக்களம்)
சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கத் தவறியுள்ளதாகவும் அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையிலும் பிரிவு 134 இன் சான்று கட்டளை சட்டத்தின் பிரகாரம் எதிரிகளான மூவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கினா“.