கட்சிக்குள் இருக்கும் சிலரை வெளியேறும்படி கூறுகிறார் சுமந்திரன்!

கட்சிக்குள் இருக்கும் சிலரை வெளியேறும்படி கூறுகிறார் சுமந்திரன்!

editor 2

மதுபானசாலை அனுமதிக்கு கடிதம் கொடுத்ததாலேயே சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தலில் இருந்து தானாக வெளியேறினார். விக்னேஸ்வரனும் போட்டியிடாது வெளியேறினார். இதேபோல், வேறுசிலரும் உள்ளே (கட்சிக்குள்) இருக்கிறார்கள். அவர்களும் தாமாக வெளியேறினால் நல்லது – இவ்வாறு கூறியுள்ளார் தமிழ் அரசுக் கட்சியின் எம். ஏ. சுமந்திரன வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், தேர்தல் பிரசார மேடைகளில், முடிந்தால் எனது பெயரை
தவிர்த்து உங்களின் தேர்தல் பரப்புரைகளை செய்யுங்கள் பார்க்கலாம் என்று
ஏனைய கட்சிகளுக்கு சவாலும் விடுத்தார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான். மக்களை கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தீர்மானம் எடுத்தபோது மேடையில் ஒன்றாக இருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அதன் பின்னர் நடந்தபொதுத் தேர்தலில் ஆசனப் பங்கீட்டின்போதே கட்சியை விட்டு வெளியேறினார். ஆசனப் பங்கீட்டு பிரச்னையே மற்றைய கட்சிகளும் வெளியேறக் காரணமாயின.

பொதுத் தேர்தலை அடுத்து தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம். ஆனால், எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வோம். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தைப் போன்று, என்றும் சுமந்திரன் சொன்னார்.

Share This Article