மின் கட்டணக் குறைப்பு போதாது – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!

மின் கட்டணக் குறைப்பு போதாது - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!

editor 2

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதற்கமைய, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைப்பதற்கு கடந்த மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபை, பிரேரணை ஒன்றை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article