கடவுச்சீட்டை பெறுவதற்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறைமை நாளை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று குடிவரவு – குடியகல்வு
திணைக்களம் அறிவித்துள்ளது குடிவரவு – குடியகல்வு திணைக்களப் பணிப்பாளர் நிலுஷா பாலசூரிய நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘பொதுமக்கள் தமது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை முன்பதிவு செய்ய முடியும்.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த முறைமை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு மக்கள் தங்கள் சந்திப்புகளை முன்பதிவு செய்ய இந்த அமைப்பின் மூலம் டோக்கன்கள்
வழங்கப்படும்.
திணைக்களத்தின் இணையத்தில் இடதுபக்கத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்யுங்கள் என்ற பிரிவு உள்ளது. இதில் பதிவு செய்வதன் மூலம் டோக்கனை பெறலாம். ஒவ்வொரு நாளும் வரையறுக்கப்பட்ட டோக்கன்
வழங்கப்படும்.
தொலைதூரத்திலிருந்து வந்து திணைக்களத்துக்கு வெளியே வரிசையில் காத்திருக்கம் மக்களை கருத்தில் கொண்டே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் 01ஆம் திகதி முதல் இணையம் மூலம் டோக்கன்களை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.