வேறு கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் இல்லை – புதுக்குடியிருப்பில் பிரதமர்!

வேறு கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் இல்லை - புதுக்குடியிருப்பில் பிரதமர்!

editor 2

தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த வேறு கட்சியினர் எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கமாட்டோம் என்று பிரதமர் ஹரிணி அமரசுசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நடந்த பரப்புரை
கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

கடந்த செப்ரெம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பதவியேற்ற பின்னர் பல வருட காலமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்ட வீதி, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. வயாவிளான் – அச்சுவேலி வீதியும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல வீதிகளை, மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் திசைகாட்டி சின்னத்துடன் இணைந்து பயணிக்கவுள்ளனர் என்றும் தம்மை பாராளுமன்றம் அனுப்புமாறும் கூறி வருகின்றனர். சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து வரும் நிலையில் அவர்களும் இவ்வாறே கூறி வருகின்றனர். தாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க உள்ளனர் என்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளன என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், 25 பேர் மாத்திரமே அமைச்சுப் பதவிகளை வகிப்பார்கள். அவர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாகவே இருப்பர். இதனைவிட, வேறு எவரையும் எமது கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதற்கோ தயாராக இல்லை.

வடக்கு மாகாணத்திலும் சரி இலங்கையின் எந்தப் பாகத்திலும், போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து எமது பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தை அழித்து வருகின்றனர். எமது அரசாங்கத்தில், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கப்படும் – என்றார்.

Share This Article