இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் வேதன முறைமையில் நிலவும் முரண்பாடுகள் விரைவில் தீர்க்கப்பட்டு வேதனம் வழங்கப்படும் என சட்டமா அதிபர் நேற்று (29) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
வேதன முரண்பாடு தொடர்பில் அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ஆசிரியர்களின் வேதனத்தை விட ஆசிரிய ஆலோசகர்களின் வேதனம் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் குறித்த முரண்பாடுகள் களையப்பட்டு வேதனம் வழங்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் யுரேஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு மனுதாரர் தரப்பு சம்மதம் தெரிவித்ததால், மனு தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.