யாழ்.,கிளி,மன்னார் உட்பட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்!

யாழ்.,கிளி,மன்னார் உட்பட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்!

editor 2

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (25) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை தவிர்ப்பதற்குப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

Share This Article