சகல வேட்பாளர்களுக்குமான விருப்பு எண்கள் இன்று வழங்கப்படவுள்ளன. வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 11ஆம் திகதி மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தன.
ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கமைய வேட்பாளர்களுக்கான விருப்பு எண் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்றைய தினத்துக்குள் சகல வேட்பாளர்களுக்குமான விருப்பு எண்களை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வேட்பாளர்கள், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை அறிவித்து இன்று அல்லது நாளைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.