காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-65) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை,
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலை உயரம் (சுமார் 2.53.0 மீ) (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அதிகரிக்கலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.