மீனவர் விவகாரம்; கொழும்பில் இருநாட்டுப் பிரதிநிதிகள் சந்திக்கின்றனர்!

மீனவர் விவகாரம்; கொழும்பில் இருநாட்டுப் பிரதிநிதிகள் சந்திக்கின்றனர்!

editor 2

இலங்கை – இந்திய மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பில் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சு நடைபெறவுள்ளது.

இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகள் இந்தப் பேச்சில் பங்கேற்கவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் போதும் மீனவர் பிரச்னை தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டது.

இதன்போது, இந்திய மீனவர்கள் இழுவை மடியை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தல் போன்றவற்றால் இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, இரு நாடுகளின் மீனவர் விவகாரம் இரு தரப்புக்கும் பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை, இந்திய கடற்றொழில் அமைச்சுகளுக்கு இடையில் 6ஆவது தடவையாக பேச்சுக்களை முன்னெடுத்து அதன் ஊடாக இரு தரப்பு இணக்கப்பாட்டுடன் பொதுத்தீர்வு ஒன்றை எட்ட எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தவிர, மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை – இந்திய கடற்றொழில்
அமைச்சுகள் பேசவுள்ளன. எனினும், இதில் பங்கேற்பவர்களின் விவரங்களை
இந்தியா அறிவிக்கவில்லை. எனினும், பங்கேற்பாளர்களின் விவரம் கிடைத்த
தும் பேச்சுக்கான ஆயத்தப் பணிகள் விரைவுபடுத்தப்படும் – என்று கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Share This Article