100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

editor 2
Bright lightning illuminates dark cloudy sky during a thunderstorm. Natural dangers and majestic beauty. Real cloudscape with computer generated lightning. Copy space on image side.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்
அறிவித்துள்ளது.

கடற்பரப்புகள் அவ்வப் போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும்,
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2. 5 – 3. 0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும்
மீனவர்களுக்கு எச்சரிச்கை விடுத்துள்ளது.

Share This Article