திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தீவரகம பிரதேசத்தில் ரயில் மோதி தாய் மற்றும் மகன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சீனக்குடா பிரதேசத்தைச்
சேர்ந்த 47 வயதுடைய தாயும் 10 வயது மகனுமே உயிரிழந்தனர்.
தாயும் மகனும், தந்தை கொண்டு வந்த உணவுப் பொதியை வாங்கிக்கொண்டு
ரயில் பாதையை கடக்கும் போதே கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப்
பயணித்த ரயிலில் மோதி பலியாகினர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.