நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை.
உள் கட்சி முரண்பாடு காரணமாக அவர் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை என்று பெயர் குறிப்பிடவிரும்பாத ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.