தமிழரசுக்கட்சியிலிருந்து பிரிந்து யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக தேர்தலை எதிர்கொள்ளும் அணி நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தராக செயற்பட்ட சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள் இருவர் உட்பட்டவர்கள் சுயேட்சையாக தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர் என்று நம்பகரமாக தெரியவந்துள்ளது.