பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் கையளித்தனர்.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி.சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.